Salayoram Solai Ondru Tamil Karaoke For Male Singers

Song : Salayoram Solai Ondru Vadum, Movie : Payanangal Mudivathillai
Download the karaoke


பாடல்               :   சாலையோரம்  சோலை  ஒன்று
படம்                 :   பயணங்கள்  முடிவதில்லை  
இசை                :   இளையராஜா
பாடியவர்கள்     :   S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள்  வைரமுத்து
Direction          :  R. சுந்தராஜன்
வருடம்              :  1982  


F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் 

M:   பாவை இவள் பார்த்து விட்டால் 
       பாலைவனம் ஊற்றெடுக்கும் 
       கண்ணிமைகள் தான் அசைந்தால் 
       நந்தவனம் ஊரெடுக்கும் 

F:    நீங்கள் எனைப் பார்த்தல் குளிரெடுக்கும்  
       மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும் 
M:   ஹே ... பாரிசாத வாசம் நேரம் பார்த்து வீசும் 
F:    மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்
       தட்டுகின்றதே இப்போது  ...
F:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M:   கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்

F:    கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ  பதிக்க 
       அலை வந்து அழித்ததினால் கன்னி மனம் தான் துடிக்க 
M:   கடலுக்கு கூட ஈரமில்லையோ 
       நியாங்களைக் கேட்க்க யாருமில்லையோ 
F :   சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
       சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
M:   பேசும் கிள்ளையே....   ஈர முல்லையே
       நேரமில்லையே...... இப்போது....

M:    சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F:    கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து    
       கண்ணாளனைப்  பார்த்து  கண்ணோரங்கள் வேர்த்து
       தர தாத்தா தார தாத்த தார தாரார தாரா